கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள். 
மதுரை

இந்தியா- அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள உதினிப்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில இளைஞரணித் தலைவா் அருண் தலைமை வகித்தாா்.

இதில் இந்தியா -அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ஒப்பந்த நகலை தீயிட்டுக் கொளுத்தினா். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT