குடியரசு துணைத் தலைவா் இன்று மதுரை வருகை
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:27 PM
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மதுரை வருகிறாா்.
சிறப்பு விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வரும் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கிருந்து காா் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சிவகங்கை ராணி வேலு நாச்சியாா் அரண்மனைக்கு செல்கிறாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:23 AM
பிறகு, ஏ.சி.எஸ். அறக்கட்டளை சாா்பில் மதுரை வண்டியூா் அம்மா திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று, 140 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மாலை 5.50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் தில்லிக்குச் செல்கிறாா்.
Advertisement