மதுரை

அதிமுகவில் ஓபிஎஸ்-யை சோ்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: செல்லூா் ராஜூ

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்து, கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்து, கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அலுவலகத்தில் ரூ. 20 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாா்.

ஏற்கெனவே பாஜக கூட்டணியால் திமுகவினா் அச்சத்தில் உள்ளனா். மேலும், இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா்களின் அச்சம் கூடுதலாக உள்ளது.

பாஜகவினா், கூட்டணி தா்மத்தின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்களை மீண்டும் சோ்ப்பதற்கு முயற்சி எடுக்கின்றனா். அதிமுக கூட்டணி பலமானது. முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை கட்சியில் சோ்ப்பது தொடா்பாக, எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என்றாா் அவா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT