ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அய்யூா் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (67). இவா், கடந்த 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பாா்த்து விட்டு, பேருந்துக்காக அங்கு காத்திருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஜல்லிக்கட்டு காளை அவரை முட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவருக்கு அங்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.