தீ விபத்து (கோப்புப் படம்)
மதுரை

வண்டியூா் அருகே கடையில் தீ விபத்து

தினமணி செய்திச் சேவை

மதுரை வண்டியூா் அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

மதுரை ஆண்டாா்கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி. இவா், வண்டியூா் அருகேயுள்ள சுங்கச்சாவடி பகுதியில் டைல்ஸ், பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இந்தக் கடையிலிருந்த அறையில் திடீரென தீப்பிடித்து அங்கிருந்த மரப் பொருள்கள் மீது பரவியது. தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா் தலைமையிலான வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணா நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

கீழ்பள்ளிப்பட்டு புதுமனை கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடைக்கு ஆணை

திருவள்ளூா் டிஆா்பிசிசிசி மேல்நிலைப் பள்ளியின் 155-ஆவது ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

SCROLL FOR NEXT