கோப்புப்படம்.  ANI
இந்தியா

மும்பையில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் எரிந்து நாசம்

மும்பையில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.

மகாராஷ்டிர மாநிலம், கிழக்கு மும்பையின் கோவண்டி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற அவசரகால மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டதாக குடிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

At least eight shanties were gutted after a fire erupted in a slum in Govandi area of eastern Mumbai on Saturday morning, a civic official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நானும் தலைவர் தம்பிதான்! - TTT வெற்றி விழாவில் சீமான்

என் வெற்றிக்குப் பின் பல ஆண்கள் இருக்கிறார்கள்! - மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி

2030-ஆம் ஆண்டுக்குள் 3000 பெண் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்! - மோகன சுந்தரி

2-வது டி20: சல்மான் அகா, உஸ்மான் கான் அதிரடி; ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு!

நிதியுதவி கோரி தலைகுனிந்து நின்றோம்: பாக். பிரதமர்

SCROLL FOR NEXT