சிறப்பு ரயில் GMSRailway
மதுரை

தைப்பூசம்: பிப். 1-இல் மதுரை - பழனிக்கு சிறப்பு ரயில்

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத் திருவிழாவையொட்டி, மதுரை-பழனி- மதுரைக்கு வருகிற பிப். 1-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மதுரை-பழனி-மதுரைக்கு வருகிற பிப். 1-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) காலை 6 மணிக்கு புறப்படும் (06145) சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு பழனியை சென்றடையும். பிறகு, பழனியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06146) மாலை 5 மணிக்கு மதுரையை வந்தடையும்.

இந்த ரயில் இரு வழித்தடத்திலும் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 7 படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT