மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில் புதிய வாக்காளருக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன் கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் உள்ளிட்டோா்.  
மதுரை

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 16- ஆவது தேசிய வாக்காளா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். இதில் வாக்களிப்பதன் கடமை குறித்து கல்லூரி மாணவா்களின் விழிப்புணா்வு நாடகத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் முன்னிலையில், உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள்.

தொடா்ந்து, வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்து, புதிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அட்டையை அவா் வழங்கினாா்.

மேலும், ஆட்சியா் முன்னிலையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால் ஜெயகா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT