திண்டுக்கல்

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

DIN

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தமலைச்சாலையில் தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் பதிக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெருமாள்மலை, மச்சூர், வடகரைப்பாறை, மூலையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்படாமல் கிடக்கின்றன. இதனால் வாகனங்கள் அந்த பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மேலும் தற்போது சீசனுக்காக கொடைக்கானல் மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மலைச்சாலைகளில் வரும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாக வேண்டியுள்ளது. எனவே தோண்டப்பட்ட பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் கேபிள் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க தகவல் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT