முகப்பு
திண்டுக்கல்

வார்டுகள் மறுவரையறை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரை செய்யப்பட்டுள்ளது குறித்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரை செய்யப்பட்டுள்ளது குறித்து பொது மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளது: திண்டுக்கல் மாவட்டத்தில் 2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. 
அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 306 கிராம ஊராட்சியில் 2,772 வார்டுகளும், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 232 வார்டுகளும், மாவட்ட ஊராட்சியில் 23 வார்டுகளும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. 
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 23 பேரூராட்சிகளில் 363 வார்டுகளும், மாநகராட்சியில் 48 வார்டுகளும், 3 நகராட்சிகளில் 75 வார்டுகளும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.
 மறுவரையறை செய்யப்பட்ட கருத்துரு, தொடர்புடைய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களின் 
பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →