திண்டுக்கல்

பழனியில் பசுமையை பரப்ப 40 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிப்பு

DIN

பழனி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பசுமையை பரப்பும் விதமாக 40 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.
         பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மூங்கில் பவுண்டேஷன், மக்கள் ஹெல்த் சென்டர் மற்றும் விழித்தெழு அறக்கட்டளை சார்பில், விதைப்பந்து தயாரிக்கும் குடும்ப விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
      நிகழ்ச்சியை, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.      இதில்,  5 பங்கு மண், 3 பங்கு சாணம், இவற்றை ஈரமாக்க வேண்டிய அளவு தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு நன்கு பிசைந்து, அதற்குள் விதைகளை வைத்து உருட்டி வைத்து  விதைப்பந்து தயார் செய்யப்பட்டது. காலை 7 மணியிலிருந்து மாலை 6  மணி வரை விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.     இது குறித்து விழித்தெழு அறக்கட்டளை ஹாரூன் பாஷா கூறியது:  பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுமையை பரப்பும் விதமாக, இந்த விதைப்பந்தை தயாரித்து வருகிறோம் என்றார்.      மூங்கில் பவுண்டேஷன் ரியாஸ் முகமது உசேன் கூறியது: தமிழகத்தில் 16 சதவீதமாக உள்ள காடுகளை 40 சதவீதமாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
 தற்போதுள்ள விதைப் பந்துகளை பழனியில் இருந்து தாராபுரம், திண்டுக்கல், வரதமாநதி மற்றும் பாலசமுத்திரம் செல்லும் வழிகளில் வீசி எறிவதன் மூலமாக விதைகளை பரப்ப முடியும். இதனால் காடு செழிக்கும் என்றார்.      மேலும், இந்த விதைப் பந்தில் புளியமரம், வேப்பமரம், புங்கமரம் போன்றவற்றின் விதைகளை வைக்கிறோம். இவை, தமிழகத்தில் நிலவிவரும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது என மற்ற நிர்வாகிகளான ராமச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் கூறினர்.
       தொடர்ந்து 12  மணி நேரம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, சுமார் 40 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.  இதுபோன்ற முயற்சியை பலரும் மேற்கொண்டால் நகரம் பசுமையாவதோடு மட்டுமின்றி, குடிநீர் பிரச்னைக்கும் தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT