திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் விதைச் சான்று இயக்குநர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப் பண்ணைகளை, விதைச் சான்று இயக்குநர் சுந்தர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப் பண்ணைகளை, விதைச் சான்று இயக்குநர் சுந்தர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
 திண்டுக்கல் மாவட்ட விதைச் சான்றுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த அவர், 2016-17ஆம் ஆண்டுக்கான இலக்கு மற்றும் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு தனியார் விதை உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி அதிக பரப்பளவில் விதைப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தனியார் விதை உற்பத்தியாளர்களை பங்கு பெறச் செய்து தரமான சான்றுப் பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
 பின்னர் திண்டுக்கல் மாவட்ட விதை பரிசோதனை நிலையம் மற்றும் விற்பனை நிலையங்களிலும், ஆத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை விதைப் பண்ணையையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது, விதைச் சான்று உதவி இயக்குநர் மு.ரமேஷ், விதைச் சான்று அலுவலர்கள் சின்னச்சாமி, போது ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT