திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே இருவர் மீது தாக்குதல்: முன்னாள் டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே இருவரை தாக்கிய முன்னாள் டிஎஸ்பி மற்றும் அவரது மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான கோபால்நாயக்கர் குளத்தில் ஆழ்குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி விவசாயிகள் பலர் அனுமதியின்றி ஆழ்குழாய் அமைத்து, அதில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே போல ஓய்வு பெற்ற டிஎஸ்பி தங்கத்துரையும் தனது தோட்டத்துக்கு தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தாராம். இதையறிந்த பொதுமக்கள் ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டியப்பனிடம் புகார் செய்தனர். அதன் பேரில் அவர் சனிக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒய்வு பெற்ற டிஎஸ்பி தங்கத்துரை மற்றும் அவரது மகன் மனோஜ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் தகராறு செய்து, நீலமலைக்கோட்டையைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் காந்தி இருவரையும் தாக்கினர். இதனால் பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தினர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் அவர்கள் கலைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தங்கத்துரை மற்றும் அவரது மகன் மனோஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT