திண்டுக்கல்

நிலக்கோட்டையில் பூக்கடை ஏலம் திடீர் ஒத்திவைப்பு: திமுகவினர் தர்னா

DIN

நிலக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பூக்கடைகளுக்கான ஏலம் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தர்னா போராட்டம் நடத்தினர்.
  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பேரூராட்சிக்கு சொந்தமான பூச் சந்தை உள்ளது. இதில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு, அதே பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக 69 கடைகள் கட்டப்பட்டன. இக்கடைகளை ஏலம் விடுவதில் அரசியல் தலையீடு இருந்ததால் சிக்கல் நிலவியது. இதில், ஏற்கெனவே உள்ள 43 பழைய கடைக்காரர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில், வழக்குரைஞர் ஆணையரை உயர்நீதிமன்றம் நியமித்து பகிரங்க ஏலம் நடத்த உத்தரவிட்டது.
 இந்நிலையில், வழக்குரைஞர் ஆணையர் ப்ரிதிவிராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் திடீரென ஏலத்தை ஒத்தி வைப்பதாகக் கூறி மறு தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைத்தார்.
 இதனைக் கண்டித்து திமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் தர்னா போராட்டம் நடத்தினர். அவர்களிடம், நிலக்கோட்டை காவல்துறையினர் சமரசப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
 இதுபற்றி பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் கூறியது: தாமதமாக வங்கி வரைவோலைக் கொண்டு வந்தவர்களிடம் வாங்க மறுத்தோம். ஏல டெண்டர் பெட்டியில் அதிக அளவில் தபால்கள் வந்துள்ளன. உயர்நீதிமன்ற ஆணையர் பரிந்துரையின் பேரில் மறு ஏலத் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT