திண்டுக்கல்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இப்பூங்காவில் 30 வகையான மலர்கள், ஆயிரக்கணக்கில் நடவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இன்னும் 10 நாள்களில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனிடையே இங்கு புற்களால் மனித உருவமும், விதவிதமான பல்வேறு உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன்குமார் கூறியது: இப்பூங்காவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் பிரையண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்காவுக்கு வருகை தந்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015- 2016 ஆம் நிதி ஆண்டில் இப்பூங்காக்களை 5,19,535 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ. 1 கோடியே 40 லட்சத்து 35 ஆயிரத்து 755 வருவாய் கிடைத்துள்ளது. அதே போல் 2016-17 ஆம் நிதியாண்டில் இரு பூங்காக்களையும் சேர்த்து 5,84,495 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ. 1 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 314 வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 22 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT