திண்டுக்கல்

பேருந்துகள் மோதல்: 17 பேர் பலத்த காயம்

DIN

கன்னிவாடி அருகே வியாழக்கிழமை இரவு கேரள சுற்றுலா பேருந்தும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து ஒரு சுற்றுலாப் பேருந்தில் 35 பேர் ராமேசுவரம் வந்தனர். பின்னர் அவர்கள் வியாழக்கிழமை இரவு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது  கன்னிவாடி அடுத்துள்ள டி.பண்ணைப்பட்டி பிரிவு அருகே சென்ற போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசுப் பேருந்து, சுற்றுலா பேருந்து மீது மோதியது.
 இதில் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த தேவகி (67), சாவித்திரி (55), கங்கா (65), சதி (35), ஸ்ரீரகு (18), மோகன் மனைவி சாவித்திரி (45), கோவிந்தன் நம்பூதிரி (77), லட்சுமி (11), ஸ்ரீபிரியா (22), பிரேமலதா (60), அகிலா (16) மற்றும் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ராஜேஸ்வரி (45), கௌசல்யா (14), சேர்காளை (40), போதுமணி (35), ராஜவேல் (40), அரசுப் பேருந்து ஓட்டுனர் பெருமாள்ராஜ் (42) ஆகியோர் பலத்த காயம் அடைத்தனர். இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT