முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் இணையதள பத்திரப் பதிவு சேவை தொடக்க விழா

ஒட்டன்சத்திரத்தில் இணைய தள பத்திரப்பதிவு சேவையை வியாழக்கிழமை அர.சக்கரபாணி எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில் இணைய தள பத்திரப்பதிவு சேவையை வியாழக்கிழமை அர.சக்கரபாணி எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
 ஒட்டன்சத்திரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள பத்திர எழுத்தர் வி.ஜி.சோமசுந்தரம் அலுவலகத்தில் இணையதள பத்திரப்பதிவு சேவையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் பத்திரப் பதிவாளர் வீரமணி, திமுக நகரச் செயலர்
ப.வெள்ளைச்சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் வீ.கண்ணன், வர்த்தக சங்கச் செயலர் பி.என்.கே.வெங்கடாஜலபதி, பத்திர எழுத்தர்கள் விஜயகுமார், குணசேகரன், நடராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

முழு கட்டுரையைப் படிக்க →