திண்டுக்கல்

பழனி அருகே சந்தனக் கட்டைகள் கடத்தல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது; கார் பறிமுதல்

DIN

பழனி அருகே புதன்கிழமை 21 கிலோ சந்தனக்கட்டைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
 பழனியை அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் வனச்சரக அலுவலர் கணேஷ்ராம் தலைமையில் பாப்பம்பட்டி பிரிவு வனவர் பழனிச்சாமி மற்றும் வனக்குழுவினர் புதன்கிழமை ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அந்த காரை வனத்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது பெரியம்மாபட்டி சட்டப்பாறை வனச்சரகப் பகுதியில் அந்த காரை நிறுத்தி வனப்பகுதியில் இருந்து வந்த இருவர் தலைச்சுமையாக மூட்டைகளை அதில் ஏற்றியுள்ளனர்.  இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்ட போது அந்த மூட்டைகளில் சந்தனக்கட்டைகள், சந்தனமர வேர் ஆகியன இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த சந்தனக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக்கட்டைகளின் எடை சுமார் 21.250 கிலோ ஆகும்.  இதன் மதிப்பு ரூ.53 ஆயிரம்.
விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முத்தந்தரா கண்ணகி நகரைச் சேர்ந்த நாராயணன் மகன் குட்டன் (53), மலப்புரம் மாவட்டம் எடக்கரை பெக்கன்வீடு முகமது அலி மகன் ரியாஸ் (41),  மலப்புரம் மாவட்டம் எரநாடு தாலுகா பூக்கோட்டூர் நெட்டத்து கரும்பி அலவி மகன் ஹனீபா (42) என தெரியவந்தது. மேலும், இவர்கள் கேரள மாநிலம் மறையூரில் இருந்து சந்தனமரங்களை வெட்டி பழனி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT