முகப்பு
திண்டுக்கல்

மகளிர் சுயஉதவிக்குழுவினர் பேரணி

பழனியில் காந்தி ஜயந்தியையொட்டி  புதன்கிழமை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பேரணி நடத்தினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

பழனியில் காந்தி ஜயந்தியையொட்டி  புதன்கிழமை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பேரணி நடத்தினர்.
காந்தி கிராமம் வழிகாட்டும் இந்திய நிர்மாண சங்கம் மற்றும் பழனி வட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் பழனி பேருந்து நிலையம், காந்தி சிலை முன் தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.
பேரணியில் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் பொறித்த பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
இப்பேரணி அடிவாரம் கோயமுத்தூர் நஞ்சுண்டாபுரம் நாடார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு மகாத்மா காந்தியடிகள் பற்றிய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் இந்தியன் வங்கி துணை மேலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →