கொடைக்கானலில் கார்- பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கார்-மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கார்-மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (23). இவரும், இவரது நண்பர்கள் ராம் (18), ஆனந்த் (21), கோகுல் உள்ளிட்ட 6 பேர் மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையான மச்சூர் பகுதியில் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு வந்த கார் மீது ஒன்றன் பின் ஒன்றாக இவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல், ராம், ஆனந்த் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராகுல் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ராம், ஆனந்த் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கோகுல் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.