திண்டுக்கல்

தமிழ் வளர்ச்சித்துறை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ரூ.66ஆயிரம் பரிசுத் தொகை

DIN

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றல் போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ.66 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
 திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடையே தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொ) பெ.சந்திரா முன்னிலையில் நடைபெற்றன.
 மொழியே விழி, விழியே மொழி என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், எல்லாருக்கும் நன்றாம் பணிதல் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், வறுமையில் செம்மை, நிமிர்ந்து நில், புரட்சிப் பெண், அன்பே அன்னை, தமிழ் தென்றல் உள்ளிட்ட 16 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. 
இதில் வெற்றிப் பெற்றவர்கள் விவரம்: கவிதைப் போட்டியில், இரா.ஜெயராணி (அண்ணாமலையார் அரசு உதவிப் பெறும் பள்ளி), க.ஹேமா (புனித வளனார் மகளிர் அரசு உதவிப் பெறும் பள்ளி), ச.மோகனா பிரியதர்ஷினி (மு.ரெ.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
 கட்டுரைப் போட்டி: நா.காருண்யா (அண்ணாமலையார் அரசு உதவிப் பெறும் பள்ளி), க.விஜயகாந்த் (புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் பள்ளி), மு.நி.கீர்த்தனா (எம்விஎம் மெட்ரிக் பள்ளி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
பேச்சுப் போட்டி:  பி.சு.ரெக்ஸி (புனித வளனார் மகளிர் அரசு உதவிப் பெறும் பள்ளி), ச.சரண்யா(அண்ணாமலையார் அரசு உதவிப் பெறும் பள்ளி), பெ.தமிழ்நதி அரசு (மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.  
 இதில் முதல் பரிசாக ரூ.10ஆயிரம்,  2ஆம் பரிசாக ரூ.7ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.5ஆயிரம் வீதம் ரூ.66ஆயிரத்துக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இப்பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT