திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே நிலத்தகராறு 3 பேருக்கு அரிவாள் வெட்டு

DIN

கொடைக்கானல் அருகே ஆதிவாசிகளிடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலத்தகராறில் 3 பேர் அரிவாளால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். 
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான போலூர் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ஜனகராஜ் (20), இவர்களுக்கு போலூர் குருட்டாறு அருகே நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளதால் அதனை ஜனகராஜ் சனிக்கிழமை சரி செய்து வந்துள்ளார். அப்போது போலூரைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் அங்கு வந்து எனது நிலத்தில் என்ன செய்கிறாய் எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். 
இதையடுத்து பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் சென்று பொன்னுச்சாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. 
அப்போது பொன்னுச்சாமியும் அவரது உறவினர் ராஜ்குமாரும் சேர்ந்து அரிவாளால் பழனிச்சாமி, அவரது மனைவி லவமணி, மகன் ஜனகராஜ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து ஜனகராஜ் கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பொன்னுச்சாமி, ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT