திண்டுக்கல்

21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

DIN

தமிழகம் முழுவதும் கடந்த 9 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், திண்டுக்கல்லில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.
கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்பப் பணியாக வரையறை செய்ய வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், கூடுதல் பணிகளை மேற்கொண்டு வந்த கிராம நிர்வாக அலுவலருக்கு வழங்கப்பட்டு வந்த 6 மாத கூடுதல் ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இவர்களை தமிழக அரசு சார்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தத் திட்டமிட்டனர்.
அதன்படி, திண்டுக்கல்லில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத்  தலைவர் சி. ராஜரத்தினம்  தலைமை வகித்தார். திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இப்பேரணியில், திண்டுக்கல் மாவட்டத்தின் 9 வட்டங்களில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT