திண்டுக்கல்

நெய்க்காரப்பட்டியில் ஜன.16-இல் ஜல்லிக்கட்டு

DIN

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பெரியகலையமுத்தூரில் வரும் ஜன.16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி கோரி விழாக் குழுவினர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருந்தனர். இதையடுத்து பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சார் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி. கோவிந்தராஜ், வட்டாட்சியர் ராஜேந்திரன், ஆய்வாளர் புகழேந்தி மற்றும் விழாவை நடத்தும் பிரமுகர்கள், ஜல்லிக்கட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
போட்டியின் போது வாடிவாசல் அருகே மெத்தை போன்ற மஞ்சுபரப்பு இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். காளை மாடுகளுக்கு போதை மருந்துகள் கொடுக்கக் கூடாது. காளைகளை துன்புறுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் ஜன.16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT