முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலுக்கு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:08 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கொடைக்கானலுக்கு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
      கொடைக்கானலில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஜூலை மாதத்தில் வழக்கமாக மழை பெய்யும். ஆனால், தற்போது மழை இல்லாமல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.    கடந்த 15 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.