திண்டுக்கல் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே ரூ.50ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே ரூ.50ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் பழனி புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, பழனியைச் சேர்ந்த கோபால்(62) என்பவர், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை மாலை பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு இரு கக்கர வாகனத்தில் வந்த கோபாலை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது 4 மூட்டைகளில் கோபால் கொண்டு வந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.50ஆயிரம் .
இதையடுத்து கோபால் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.