மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருப்பது...
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுமன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு, மேக்கேதாட்வில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது பிரச்னை தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று (மே 24) தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
That an all-party meeting be convened to deliberate on preventing the construction of the dam at Mekedatu...
காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.