திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்

DIN

வத்தலகுண்டு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், 3-ஆம் ஆண்டு மாணவர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
 திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள சிங்காரக்கோட்டை பகுதியில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியின்போது, வணிகவியல் துறை முதலமாண்டு மாணவர்களுக்கும், 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   இந்நிலையில் திங்கள்கிழமை நண்பகல் உணவு இடைவேளையின்போது, இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 
இதில், முதலாமாண்டு மாணவர்கள் தாக்கியதில், 3-ஆம் ஆண்டு மாணவர்களான கன்னிவாடியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் (20), பூசாரிப்பட்டியைச் சேர்ந்த பாண்டி (20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
 இருவரும் வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT