திண்டுக்கல்

ஆத்தூரில் வாகனச் சோதனை: தேங்காய் வியாபாரியிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

DIN

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, உரிய ஆவணமின்றி தேங்காய் வியாபாரி எடுத்துச் சென்ற ரூ.1.20 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். 
அய்யம்பாளையம் அருகேயுள்ள தேவரப்பன்பட்டியைச் சேர்ந்தவர் வீரராஜ்(58). தேங்காய் வியாபாரி. திண்டுக்கல் சந்தைக்கு தேங்காய் கொண்டு வந்த இவர், மீண்டும் தேவரப்பன்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றார். 
அப்போது ஆத்தூர் கோழிப்பண்ணை அருகே, துணை வட்டாட்சியர் மனோகரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, வீரராஜை வழிமறித்து சோதனையிட்ட போது, அவர் ரூ.1.20 லட்சம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. 
ஆனால், அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT