திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கோயில் காளை உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி

திண்டுக்கல்லில் உயிரிழந்த கோயில் காளைக்கு, பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

DIN

திண்டுக்கல்லில் உயிரிழந்த கோயில் காளைக்கு, பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியிலுள்ள காளியம்மன் கோயில் காளை காளி. 19 வயதான இந்த காளை, கடந்த 15 ஆண்டுகளாக திண்டுக்கல் உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று, தங்கம், வெள்ளிக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களையும் வென்றுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இந்த காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி காளை வியாழக்கிழமை உயிரிழந்தது.
அதையடுத்து,  ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் உயிரிழந்த கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதி சடங்குகளுக்குப் பின் காளையின்  உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT