திண்டுக்கல்

"மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

DIN

வசதியற்ற மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, திண்டுக்கல் பிஎன்சி தர்ம சாஸ்தா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் டி.கே.லோகநாதன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் பிஎன்சி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில், வசதி வாய்ப்பற்ற தகுதியுடைய மாணவர்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டிலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது.
உதவித் தொகை பெற விரும்பும் மாணர்கள், கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் பள்ளி ஆசிரியரின் பரிந்துரையுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கல்லூரியில் சேர உள்ள மாணவர்கள், கல்லூரி அனுமதி கடிதம் மற்றும் கட்டண விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே, பிஎன்சி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் உதவித் தொகை பெற்று கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள், இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து பருவத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள், எஸ். ஜெயசந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளர், ராம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், 50-ஏ, புது அக்ரஹாரம், பழனி ரோடு, திண்டுக்கல்- 624 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT