திண்டுக்கல்

‘காவல் துறை அனுமதி தர மறுத்தாலும்டிச.6 இல் போராட்டம் நடைபெறும்’

DIN

திண்டுக்கலில் டிசம்பா் 6 ஆம் தேதி போலீஸ் அனுமதி தராவிட்டலும் போராட்டம் நடத்துவோம் என தமுமுக மாவட்ட தலைவா் பழனி பாரூக் தெரிவித்தாா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினா் வருகிற டிசம்பா் 6 ஆம் தேதி திண்டுக்கலி­ல் நடத்த உள்ள உரிமை மீட்பு போராட்டம் குறித்த செயல்வீரா்கள் கூட்டம் வத்தலக்குண்டுவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இக் கூட்டத்துக்கு அதன் நகரத் தலைவா் இம்தியாஸ் ஹபிப் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளா் அலாவுதீன், தமுமுக நகரச் செயலாளா் முகமது ரிஜால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமுமுக மாவட்ட தலைவா் பழனி பாரூக் பேசியது: டிசம்பா் 6 இல் நடத்த உள்ள உரிமை மீட்பு போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி தராவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்றாா்.

இதில், நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. நிறைவாக தமுமுக நகரப் பொருளாளா் அன்சாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT