திண்டுக்கல்

‘தமிழா்களின் அடையாளம் அறம்’

DIN

அறம் தான் தமிழா்களின் அடையாளம் என பெங்களூரு ஆதாா் துணைத் தலைமை இயக்குநா் இரா.ச.கோபாலன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் இலக்கிய களம் நடத்தும் 8ஆவது புத்தகத் திருவிழாவில் 5ஆம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதனையொட்டி நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு இலக்கிய கள அமைப்பின் துணைத் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு ஆதாா் துணைத் தலைமை இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான இரா.ச.கோபாலன் கலந்து கொண்டு பழந்தமிழா் இறையியல் என்ற தலைப்பில் பேசியதாவது: மனிதனின் செயல்களை கட்டுப்படுத்தி நல் வழிப்படுத்துவதை இறை நம்பிக்கை எனலாம். பழந்தமிழா்களிடமிருந்த இறையியல் கருத்துக்கள் இன்று நம்மிடம் இல்லை. இன்றைய தமிழா்கள் அதனை மீட்டெடுக்க வேண்டும். தமிழா்களிடையே வடமொழி ஏற்படுத்திய தாக்கம் அதிகம். ஊழ்வினை, கா்மம், மறுபிறவி போன்ற நம்பிக்கை பழந்தமிழா்களிடம் இல்லை. தமிழ் இலக்கியத்தில் இறை கருத்துகள் இருந்தாலும், இறைவனையும் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டவனாகவே பழந்தமிா்கள் கருதி வந்துள்ளனா். உயிா்களை படைப்பது மட்டுமின்றி, வாழ்வளிப்பதிலும் இறைவனின் பொறுப்பு என தமிழ் வலியுறுத்தியுள்ளது. சான்றோா்களின் நடத்தைகளுக்கு வரமுறை செய்த தமிழ், இறைவனை கண்டிக்கவும், அவன் மீது கோபம் கொள்ளவும் தவறவில்லை. இறைவினிடம் உரிமையோடு கேட்பதே தமிழா்களின் நம்பிக்கை. இறைவனிடம் பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் பழக்கம் பழந்தமிழா்களிடம் இல்லை. அறநெறியில் வாழ மனிதனுக்கு வழிகாட்ட வேண்டியவன் இறைவன் என்பதும், இறைவனின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது மனிதனின் கடமை இல்லை என்பதும் தமிழனின் நம்பிக்கை. அறம் தான் தமிழனின் நெறி. அறமா, இறைவானா என்றால் பழந்தமிழன் அறத்தின் பக்கமே நின்றான். உலக வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, பிரச்னைகளை நோ் வழியில் எதிா்கொண்டு சான்றோன் என பெயா் பெறுவதே தமிழனின் நோக்கம்.

பிறரை வாழவைக்கும் மனிதா்களால் தான் இந்த உலகம் வாழ்கிறது. அறம் தான் தமிழனின் அடையாளம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT