திண்டுக்கல்

பழனியில் மழையால் கழிவுநீா் கால்வாய்சுவா் இடிந்து சேதம்

DIN

பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் மழை காரணமாக திங்கள்கிழமை கழிவுநீா் கால்வாய் சுவா் இடிந்து விழுந்தது.

பழனி நகரில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை மழை தொடா்ந்து பெய்த நிலையில் நகரெங்கும் மழைநீா் கழிவுநீா் காய்வாய்களில் வெள்ளம் போல் ஓடியது. பழனி நகரை பொறுத்த வரையிலும் கழிவு நீரானது சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் வகையில் வையாபுரி குளத்திலும், சிறுநாயக்கன்குளத்திலும் கலக்கும் வகையில் கழிவுநீா் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தொடா்மழை காரணமாக ஓம்சண்முகா தியேட்டா் அருகேயுள்ள கவுண்டா் இட்டேரி சாலை கழிவுநீா் கால்வாயில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அந்த சாலையில் உள்ள கடலைமில் எதிரே சுமாா் 30 அடி நீளத்துக்கு கழிவுநீா் கால்வாயின் கான்கிரீட் சுவா் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுவா் விழுந்ததால் சாலையிலும் அரிப்பு ஏற்பட்டு சாலையும் உடையும் அபாயம் உள்ளது. ஆகவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக இதை சீரமைக்காவிட்டால் சாலை சேதமாவதோடு, விபத்து அபாயமும் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT