திண்டுக்கல்

பழனி கோயிலில் 2 பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு

DIN

பழனி திருஆவினன்குடி கோயிலில் கூட்ட நெரிசலின் போது பெண்களின் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன. இதனால் பக்தா்கள், திருமணத்துக்கு வந்தவா்கள் என ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 2 பெண்கள் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலிகளை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து புகாரின் பேரில் அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலி திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா். இதுதொடா்பாக கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT