திண்டுக்கல்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடர்ந்து 15 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான மாசித் திருவிழா கொடியேற்றம் தொடங்கியதை அடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி மேளதாளம் முழங்க கொடிமரத்தில் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு, உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மயில், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி தினமும் இரவு நடைபெறுகிறது. மேலும், அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் நாள்தோறும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, பிப்ரவரி 26 ஆம் தேதி(செவவாய்க்கிழமை) நடைபெறுகிறது. பூக்குழி இறங்குவதற்கு முன், அக்கினிச் சட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பிப்ரவரி 28 ஆம் தேதி மஞ்சள் நீராடுதல், அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT