திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் வேளாண் விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை தொடக்கம்

DIN

ஒட்டன்சத்திரம் வேளாண்மை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பருத்தி விற்பனை தொடங்கியுள்ளது.
  ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே வேளாண்மை விற்பனைக்கூட வளாகம் உள்ளது. இங்கு இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். அப்பொருள்களை வாங்குவதற்கு கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அதில் பருத்தி உயர்தரத்தில் இருந்ததால்  மாவட்ட வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடம் மூலம் முதன்முறையாக ஏலம் விடப்பட்டது. அதில் பருத்தி தரத்துக்கு ஏற்ப வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஒரு கிலோ பருத்தி ரூ.45 முதல் ரூ. 55 வரை விற்பனையானது. ஏல நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம், கண்காணிப்பாளர்கள் ராமன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT