முகப்பு
திண்டுக்கல்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: படத்திற்கு மாலையணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் அவரது

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:32 am IST
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள எம்ஜிஆர் சிலை வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதிமுக மாவட்டச் செயலர் வி.மருதராஜ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சீ.ராஜ்மோகன், முன்னாள் நகரச் செயலர் பாரதிமுருகன், அகரம் பேரூர் செயலர்  சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நத்தம்,  வேடசந்தூர், குஜிலியம்பாறை, வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார்.  வைகை அணை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மாலை அணிவித்தபின், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினர். 
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதுதவிர கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி மற்றும்  பல்வேறு பகுதிகளில் பிறந்த நாள் விழா கொண்டாடடப்பட்டது. 
மேலும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் 800 க்கும் மேற்பட்டோருக்கு பழங்கள், ரொட்டிகள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. நகரச் செயலாளர் முத்துவெங்கடராமன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அதிமுக நகரச் செயலர் ஸ்ரீதர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ளஅமமுக  அலுவலகத்தில் ஜெயயலிலதா படத்திற்கு நகரச் செயலர் கோவிந்தன் 
தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயம், மாரியம்மன் கோயில், பள்ளிவாசல் ஆகியவற்றில் மும்மத வழிபாடு நடைபெற்றது. 
பின்னர் மூஞ்சிக்கல் பகுதியில் 171- முதியோர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணிச் செயலர் இளம்வழுதி, துணைசெயலர் ராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலர் சையது இப்ராஹிம்,கொடைக்கானல் மேல்மலை ஒன்றியச் செயலர் பொன்னுத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம்: முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை பகுதியில் அதிமுக  சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்திற்கு மேல்மலை ஒன்றியச் செயலர் வி.கே.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ஜனகராஜ், ஒன்றிய அம்மா பேரவை செயலர் ஆர்.சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் ஜாபர் மற்றும் தமோதரன் உள்ளிட்ட  பலர் பேசினர். முன்னதாக மாவட்ட விவசாய அணி பொருளாளர் கோபால் வரவேற்றார்.  பூம்பாறை கிளை கழகச் செயலர் நாகராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.