முகப்பு
திண்டுக்கல்

நேதாஜி பிறந்த நாள் விழா

திண்டுக்கல்லில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 123 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் லாலா லஜபதிராய் 155ஆவது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On : 24 ஜனவரி 2019, 1:03 am IST
பகிர்:

திண்டுக்கல்லில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 123 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் லாலா லஜபதிராய் 155ஆவது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
  திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் மாநகரத் தலைவர் க.ஆனந்தன் தலைமை வகித்தார்.
  மாவட்ட பொதுச் செயலர் மு.சுந்தர் ஈசன் சிறப்புரை நிகழ்த்தினார். நேதாஜி, காமராஜ் ஆகியோர்களின் உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
  அதனைத் தொடர்ந்து, அந்தமான் மற்றும் நிக்கோபர் பகுதியிலுள்ள ரோஸ் தீவை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மேலும் விரைவில் தொடங்கப்பட உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகத்திற்கு நேதாஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவை நிறுவனர் சு.வைரவேல் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.