திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில்

DIN

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மையநாயக்கனூர் அருகே மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையின் ஓரமாக கடந்த ஒரு வாரமாக ஒரு மூட்டை கிடந்துள்ளது. அந்த மூட்டைக்கு ஒரு மர்ம நபர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.  மூட்டை எரிந்ததில், அதனுள்ளே இருந்த பெண்ணின் சடலம் வெளியே தெரிந்தது.  
இதைக்கண்ட அப்பகுதியினர் அம்மையநாயக்கனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தீயை அணைத்து சோதனை செய்தனர். இதில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. அவரது கால்களில் 3 மெட்டிகளும், கை விரலில் ஒரு மோதிரமும் இருந்துள்ளது. 
மீட்கப்பட்ட சடலத்தை, பிரேதப் பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT