திண்டுக்கல்

விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

கல்வி நிறுவனங்களில் விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடைபெறாமல் தடுக்கவும், விடைத்தாள் திருத்தம் நியாயமாக நடைபெறவும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றதாகவும், பணம் வாங்கிக்கொண்டு பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டுக் குறிப்பாணை வழங்கப்பட்டன. இந்த குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி ஆசிரியை நிர்மலாதேவி உள்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: 
கல்வி நிறுவனங்களில் விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, விடைத்தாள் திருத்தம் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும். 
இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்த சூழ்நிலையில் குற்றச்சாட்டுக் குறிப்பாணையில் நீதிமன்றம் தலையிட்டால் விசாரணை பாதிக்கப்படும். 
இதனால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக் குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் விசாரணையைச் சந்தித்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மனுதாரர்கள் 2 வாரத்தில் குற்றச்சாட்டுக் குறிப்பாணைக்கு பதிலளிக்க வேண்டும். மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT