திண்டுக்கல்

100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு முறையாக பணி மற்றும் ஊதியம் வழங்கக் கோரி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேடசந்தூர் ஒன்றிய நிர்வாகி முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,  எரியோடு பகுதியில் 100 நாள் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கக் கோரியும், அரசு நிர்ணயித்துள்ள முழு ஊதியத்தை வழங்கக் கோரியும் கோஷமிட்டனர். 
இதனை அடுத்து வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்துப் பணியாளர்களுக்கும் சமமாக பணி வழங்கப்படும் என்றும், நிறைவேற்றப்பட்ட பணிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 
இதில் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள கோவிலூர், புதுரோடு பகுதியைச் சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயனாளிகள் 200 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT