திண்டுக்கல்

திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை

DIN

திண்டுக்கல் மற்றும் நத்தம் சுற்றுப்புற பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில்  இரவு 7 மணி முதல் திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் இயல்பாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதைத் தொடர்ந்து, திண்டுக்கல், சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம்  உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனிடையே காற்றின் வேகம் குறைந்து, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருள் சூழ்ந்த நிலையில் பலத்த மழை பெய்ததால் திண்டுக்கல் நாகல் நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர் எம் காலனி பகுதியில் மரம் முறிந்து விழுந்து  போக்குவரத்து தடைபட்டது. கடுமையான வெப்பநிலையால்  அவதி அடைந்து வந்த மக்களுக்கு இந்த கோடை மழை  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் : கொடைக்கானலில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் குளுமையான தட்ப வெப்ப நிலை நிலவி வருகிறது.  இதனால், கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில்  மிதமான  வெயிலும், மாலையில் இதமான குளிர்ந்த காற்றும் நிலவி வருகிறது. 
இதனைத் தொடர்ந்து  கொடைக்கானல், பாம்பார்புரம், செண்பகனூர், பிரகாசபுரம், நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை பரவலாக சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. 
இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT