திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி

கொடைரோடு அருகே கூலித் தொழிலாளி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.   

DIN

கொடைரோடு அருகே கூலித் தொழிலாளி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.   
திண்டுக்கல் அடுத்த ஆரியநல்லூரைச் சேர்ந்தவர் தங்கவேல் (47). இவர் கட்டட வேலை பார்த்து வருகிறார்.  சனிக்கிழமை கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த சண்முகபாண்டி என்பவருடைய வீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.  அந்த கட்டடத்திற்கு வண்ணம் பூசும் பணியில் தங்கவேல் ஈடுப்பட்டு வந்தார். அப்போது தங்கவேல் மீது மின் விளக்கு சாய்ந்து விழுந்தது. அந்த மின் விளக்கை கையில் எடுத்துபோது, திடீர் என அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தங்கவேல் தூக்கி வீசப்பட்டார். உடனேஅருகில் இருந்தவர்கள் காயம் காயமடைந்த தங்கவேலை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தங்கவேலுக்கு செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT