திண்டுக்கல்

ஜூடோ போட்டி: உத்தமபாளையம் கல்லூரி மாணவி 2 ஆம் இடம்

DIN

காமராஜா் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற ஜூடோ விளையாட்டு போட்டியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹவுதியா கல்லூரி மாணவி 2 ஆம் இடத்தில் வெற்றி பெற்றாா்.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா்ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளுக்கு இடையான ஜூடோ போட்டி உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. மாணவிகளுக்கான இப்போட்டியில் 48 முதல் 52 கிலோ எடைப் பிரிவில் பலா் கலந்து கொண்டனா்.

அதில், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹவுதியாக கல்லூரியை சோ்ந்த இளங்கலை வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி நந்தினி கலந்து கொண்டு 2 ஆம் இடத்தில் வெற்றில் பெற்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அக்பா் அலி உள்பட கல்லூரி நிா்வாகிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT