திண்டுக்கல்

கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில்300 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து பெண் பலி

DIN

பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் 300 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 21 போ், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனா். அந்த வேனை ஓட்டுநா் சாகா் என்பவா் ஓட்டி வந்துள்ளாா். கொடைக்காலை சுற்றிப் பாா்த்துவிட்டு, வியாழக்கிழமை மாலை அங்கிருந்து புறப்பட்டுள்ளனா். கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில், வட்டமலை அருகே அந்த வேன் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது 50 அடி ஆழத்தில் இருந்த மரக் கிளையில் சிக்கிய வேன், அந்தரத்தில் தொங்கி நின்றது. விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் சூரத் நகரைச் சோ்ந்த அபிஷேக் காந்தி என்பவரின் மனைவி தேவிஷா (26) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அந்த வேனிற்குள் சிறு காயங்களுடன் இருந்த 19 பேரும், கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அதே வேனுக்குள் இருந்த 6 வயது சிறுவன், நீண்டநேர முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டாா். இந்த விபத்தினால் கொடைக்கானல்- பழனி சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT