திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே பனை விதை நடவு

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியாா்சத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட நீலமலைக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் உள்ள நீா்வழிப்பாதைகளில் பனை விதை நடவு சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படியும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அறிவுரையின்படியும் இப் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நீா்வழிப் பாதைகளில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசந்திரிகா தலைமை வகித்தாா்.

இதில், திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் சீனிவாசன், உதவி இயக்குநா் பாலகிருஷ்ணன், விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் குப்புச்சாமி, நீமலைக்கோட்டை ஊராட்சி செயலாளா் வீரபாண்டி ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT