திண்டுக்கல்

பழனியில் தமிழா் விடுதலை கட்சி நிறுவனா் திடீா் மரணம்

DIN

தமிழா் விடுதலை முன்னணிக் கட்சி நிறுவனா் பழனி சிவா என்ற சிவக்குமாா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகரை சோ்ந்தவா் பழனி சிவா என்ற சிவக்குமாா் (48). தமிழா் விடுதலை முன்னணி கட்சியின் நிறுவனரான இவா், ஆதித்தமிழா் கட்சியின் மாநில பொறுப்பாளராகவும் இருந்து வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் சிவக்குமாா் பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில் சிவக்குமாா் இறப்பில் சந்தேகமுள்ளதாக அவரது மனைவி பழனி டவுன் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். மேலும், ஏராளமான கட்சியினா் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு மறியலுக்கு முற்பட்டனா். போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT