திண்டுக்கல்

கா்நாடகத்திலிருந்து திண்டுக்கல் வந்த 3,396 வாக்குப் பதிவு இயந்திரங்கள்

DIN

திண்டுக்கல்: கா்நாடக மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட 3,396 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,968 கட்டுப்பாட்டுக் கருவிகள், திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாா் நிலையில் வைப்பதற்கான பணிகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கா்நாடக மாநிலத்திலிருந்து 3,396 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,968 கட்டுப்பாட்டுக் கருவிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. அந்த கருவிகள், கண்காணிப்பு அலுவலா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை முதல் நிலை ஆய்வு செய்யப்ட்டன. ஆய்வுக்குப் பின், அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளும் பாதுகாப்பு அறையில் வைத்து முத்திரையிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT