திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர் பொறுப்பு வகித்து வந்த 10 பேரை பணியிட மாற்றம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர் பொறுப்பு வகித்து வந்த 10 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். 
 வருவாய் வட்டாட்சியர் பொறுப்பில் ஓராண்டு பணி நிறைவு செய்தவர்கள், அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாற்றுப் பணி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 4 வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் 6 தனி வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு (அடைப்பு குறிக்குள் பழைய பணியிடம்): கே.அரவிந்த் - வட்டாட்சியர் ஆத்தூர் (பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர்), கே. பிரபா - முத்திரைத் தாள் தனி வட்டாட்சியர் திண்டுக்கல் (வட்டாட்சியர் ஆத்தூர்), எல். சக்திவேலன் - தனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை, நிலக்கோட்டை (முத்திரைத் தாள் தனி வட்டாட்சியர் திண்டுக்கல்), வ.பாண்டிச்செல்வி - வட்டாட்சியர் திண்டுக்கல் மேற்கு (தனி வட்டாட்சியர் நிலக்கோட்டை), அ.லட்சுமி - பழனி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வட்டாட்சியர் திண்டுக்கல்), லா.யூஜின் - வட்டாட்சியர் நிலக்கோட்டை (தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம், நிலக்கோட்டை), டி. நவநீதகிருஷ்ணன் - தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம், வேடசந்தூர் (வட்டாட்சியர் நிலக்கோட்டை), பி.சிவசுப்பிரமணியன் - வட்டாட்சியர் குஜிலியம்பாறை (தனி வட்டாட்சியர் வேடசந்தூர்), த.காளிமுத்து - தனி வட்டாட்சியர் நிலம் எடுப்பு தேசிய நெடுஞ்சாலை நத்தம் (வட்டாட்சியர் குஜிலியம்பாறை), பி.சந்திரன் - தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் நிலக்கோட்டை (தனி வட்டாட்சியர் நிலம் எடுப்பு தேசிய நெடுஞ்சாலை நத்தம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT